Last Updated:
இந்த ஏவுகணை மூலம், 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை துல்லியமாக தாக்க்கூடும் என புதின் தெரிவித்தார்.
ரஷ்யாவின் சக்தி வாய்ந்த இந்த அணு ஆயுத ஏவுகணையான “சர்மத்”, நடப்பாண்டின் இறுதிக்குள் போர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே 3 நாட்கள் அமலில் இருந்த தற்காலிகப் போர் நிறுத்தம் நிறைவடைந்து, இரண்டு தரப்பினரும் மீண்டும் தாக்குதலை தொடங்கினர். இந்நிலையில், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் புதின், சக்தி வாய்ந்த அணு ஆயுத ஏவுகணையான “சர்மத்” நடப்பாண்டின் இறுதிக்குள் போர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனக் கூறினார்.
அணு ஆயுத ஏவுகணையான “சர்மத்”,
இந்த ஏவுகணை, சாதாரண பாலிஸ்டிக் பாதையில் மட்டுமின்றி, துணை புவிவட்டப் பாதையிலும் பயணிக்கும் திறன் கொண்டது எனக் கூறினார். இதன் மூலம், 35 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை துல்லியமாக தாக்கக்கூடும் என புதின் தெரிவித்தார். இந்நிலையில், ரஷ்யாவின் புதிய அணு ஆயுதங்கள் தொடர்பாக புதின் அளிக்கும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என மேற்கத்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

