தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று வி.சி.க தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள வி.சி.க. தலைவர் திருமாவளவனின் இல்லத்துக்கு சென்ற முதல்வர் விஜய், அங்கு அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்வர் விஜய்யை வாசலுக்கே வந்து வரவேற்ற திருமாவளவன், அவருக்கு பூங்கொத்து அளித்தார். அதன் பின்னர் முதல்வர் விஜய்யும் திருமாவளவனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். பின்னர் இருவரும் சிறிது நேரம் உரையாடினார்கள். அதன்பின்னர் திருமாவளவன் அரசமைப்பின் முகப்புரையை முதல்வர் விஜய்க்கு வழங்கினார்.
முன்னதாக, மண்ணடியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் விஜய் கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது ஐ.யூ.எம்.எல். தலைவர்களும் உடனிருந்தனர். (a)


