• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விஜய்யின் ஜோதிடருக்கு முக்கிய நியமனம்! தவெகவிற்கு எதிராக வெடித்த சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
விஜய்யின் ஜோதிடருக்கு முக்கிய நியமனம்! தவெகவிற்கு எதிராக வெடித்த சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) தவெகவின் ஊடக பேச்சாளரான ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டித்தை நியமித்திருப்பது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் இன்று(12) வெளியிட்டுள்ளார்.


தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தல் காலத்தில் ஆதரவளித்த இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இந்த நியமனத்தை ஏற்கனவே விமர்சித்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியும் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு



ரதன் பண்டிட் ஒரு ஜோதிடர் எனக் கூறப்படும் நிலையில், அத்தகைய ஒருவருக்கு அரசுப் பதவியில் இடமளிப்பது முறையல்ல என இக்கட்சிகள் வாதிடுகின்றன.

Beats me. Why would an astrologer require an OSD position ?? Can any one explain. https://t.co/ga3CQdIXiC

— Sasikanth Senthil (@s_kanth) May 12, 2026



இது தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

நியமனம் குறித்த கடிதத்தின் நகலைப் பகிர்ந்துள்ள அவர், “ஒரு ஜோதிடருக்கு முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி பதவி எதற்குத் தேவைப்படுகிறது? யாராவது இதனை விளக்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பதில் அளிக்காத விஜய்


விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக நின்ற காங்கிரஸ் போன்ற முக்கியக் கட்சிகளே இந்த விவகாரத்தில் அதிருப்தி வெளியிட்டிருப்பது, புதிய அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தத்தை உருவாக்கியுள்ளது.

விஜய்யின் ஜோதிடருக்கு முக்கிய நியமனம்! தவெகவிற்கு எதிராக வெடித்த சர்ச்சை | Tvk Vijay Astrologer Appointed As Special Officer



தனது முடிவை விஜய் திரும்பப் பெற வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வரும் போதிலும், முதல்வர் தரப்பிலிருந்து இதுவரை இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.


இந்த நியமனம் தமிழக அரசியலில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளதோடு, புதிய அரசின் செயல்பாடுகள் மீதான விமர்சனங்களையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!



Read More

Previous Post

அன்வார் தனது ‘நண்பர்’ விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிறகு, அதே தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்று புதிய முதலமைச்சருக்கு பி.எஸ்.எம். அறிவுரை – Malaysiakini

Next Post

படாஸ் ஆறு அருகே மாயமான மாணவர் சடலமாக மீட்பு: போலீசார் தீவிர விசாரணை | Makkal Osai

Next Post
படாஸ் ஆறு அருகே மாயமான மாணவர் சடலமாக மீட்பு: போலீசார் தீவிர விசாரணை | Makkal Osai

படாஸ் ஆறு அருகே மாயமான மாணவர் சடலமாக மீட்பு: போலீசார் தீவிர விசாரணை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin