தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்று (12-05-2026) நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சட்டவிரோத செயல்
இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிக்குகள் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நாட்டிற்குத் திரும்பிய போது கொண்டு வந்த பயணப் பொதிகளில் இருந்து 112 கிலோகிராம் குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அமிதானந்த என்ற பிக்கு ஒருவரே இந்தச் சட்டவிரோத செயலை வழிநடத்தியுள்ளமை தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அமிதானந்த என்ற பிக்குவும் கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

