Last Updated:
ஒரு மாடு மற்றொரு மாட்டை தோற்கடிக்கும் வரை தலையால் முட்டிக் கொண்டு பலத்தை நிரூபித்ததைப் பார்த்து பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர்.
பசு மாடுகள் என்றால் பால் தரும், புல் மேயும் என்று மட்டும் நினைக்க வேண்டாம், தங்களுக்குரிய தலைவனை தேர்ந்தெடுக்க இப்படி ஆக்ரோசமாகவும் மோதிகொள்ளும். இதை உணர்த்தும் ஒரு சம்பவம், சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்தது.
சுவிட்சர்லாந்தில் உள்ள ’ஹெரென்ஸ்’ இனத்தைச் சேர்ந்த பசு மாடுகள் இயல்பாகவே போட்டி உணர்வு கொண்டவை. மேய்ச்சல் நிலத்தில் ஒன்றாக மேயும் போது, யார் பெரியவன் என்று தீர்மானிக்க இவை தலையைப் பயன்படுத்தி மோதிக் கொள்வது வழக்கமாக உள்ளது. இந்த பசு மாடுகளை கவுரவிக்கும் வகையில் அந்நாட்டின் வாலாயிஸ் (Valais) மாகாணத்தில் பசு மாடுகளுக்கு என்று பாரம்பரிய சண்டை போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
Spectators gathered in Switzerland’s Valais canton for the Queens fight, where Herens cows lock horns in a traditional contest of strength and hierarchy pic.twitter.com/l9Kml7z9EN
— Reuters (@Reuters) May 11, 2026
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பசு மாடுகள் நேருக்கு நேர் நின்று சண்டையிட்டன. ஒரு மாடு மற்றொரு மாட்டை தோற்கடிக்கும் வரை தலையால் முட்டிக் கொண்டு பலத்தை நிரூபித்ததைப் பார்த்து பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர். இந்த சண்டையில் பசுக்கள் இறப்பதோ அல்லது படுகாயமடைவதோ இல்லை. பெரும்பாலும் இவை தள்ளுமுள்ளு சண்டையாகவே இருக்கும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

