Last Updated:
ராக்கெட்டிலிருந்து பிரிந்த தியான்சோ-10 விண்கலம், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிக்கரமாக நுழைந்துள்ளது.
தியான்கோங் விண்வெளி நிலையத்திற்குத் தேவையான சரக்குகளை ஏற்றிச்செல்லும் தியான்சோ-10 விண்கலம் சீனாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சீனா தனது சொந்த முயற்சியில் விண்வெளியில் ஒரு நிரந்தர ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. தியான்கோங் என்ற அந்த விண்வெளி நிலையத்தில், தற்போது 3 வீரர்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தியான்கோங் விண்வெளி நிலையத்திற்குத் தேவையான சரக்குகளை அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது. உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 8.14 மணிக்கு சீனாவின் ஹைனான் (Hainan) மாகாணத்திலுள்ள வென்சாங் (Wenchang) ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச்-7 ராக்கெட் மூலம் சரக்கு விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, ராக்கெட்டிலிருந்து பிரிந்த தியான்சோ-10 விண்கலம், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நுழைந்தது. இதில், விண்வெளி ஆய்வுக்குத் தேவையான உபகரணங்கள், விண்வெளி மையத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என 220-க்கும் மேற்பட்ட 6 ஆயிரத்து 200 கிலோ எடையுள்ள பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
May 12, 2026 10:43 AM IST


