ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் அனைத்து கப்பல்களும் இனி ‘பாரசீக வளைகுடா ஜலசந்தி அதிகாரசபையிடம்’ (PGSA) முன் அனுமதி பெறுவதுடன், பயணக் கட்டணத்தையும் (Toll) செலுத்த வேண்டும் என ஈரான் அறிவித்துள்ளது.
இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, கப்பல்கள் தங்களின் உரிமையாளர் விபரம், காப்பீடு, பணியாளர்கள் மற்றும் கொண்டு செல்லப்படும் சரக்குகள் குறித்த 40-க்கும் மேற்பட்ட விரிவான தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க பொருளாதாரத் தடை
முறையாகத் தகவல்களை வழங்காத கப்பல்கள் இப்பாதையை பயன்படுத்த அனுமதி மறுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Image Credit: ABC News
ஈரானிய ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஒத்துழைக்கும் நாடுகள் ஹோர்முஸ் நீரிணையை கடப்பதில் கடுமையான சிக்கல்களைச் சந்திக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம். இதேவேளை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஈரானுடன் இராஜதந்திர ரீதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, தங்கள் நாட்டு கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்துள்ளன.
எரிபொருள் விலை
உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் குறுகிய கடல் பாதை வழியாகவே நடைபெறுகிறது.

Image Credit: Surfiran
பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து ஈரான் இந்தப் பாதையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

