Last Updated:
பொருளாதார கடும் பாதிப்பை சந்திக்க கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவுறுத்தல்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் வதோதராவில் ஆற்றிய முறையில் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த மூன்று மாதங்களாக நீடித்து வரும் போர் சூழலால் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் கப்பல் போக்குவரத்து தடைகளால் இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனை எதிர்கொள்ள, இந்திய மக்கள் அனைவரும் ஒருமித்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மெட்ரோ ரயில், மின்சாரப் பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துமாறும், கார் வைத்திருப்பவர்கள் ‘கார் பூலிங்’ (Carpooling) முறையைப் பின்பற்றுமாறும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி அதிக அளவில் தங்கம் இறக்குமதிக்காகச் செலவிடப்படுகிறது. எனவே, உலகளாவிய சூழல் சீராகும் வரை தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுமாறு பிரதமர் அறிவுறுத்தினார். மேலும், கோவிட் காலத்தைப் போலவே தற்போதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ‘வீட்டிலிருந்தே வேலை’ மற்றும் ‘மெய்நிகர் கூட்டங்களை’ (Virtual Meetings) ஊக்குவிக்க வேண்டும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதையும், வெளிநாடுகளில் திருமணங்கள் (Destination Wedding) நடத்துவதையும் தவிர்க்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவிலேயே அழகான இடங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், குஜராத்தில் உள்ள ‘ஒற்றுமைக்கான சிலையை’ ஒரு திருமண இடமாகப் பயன்படுத்தப் பரிந்துரைத்தார். அந்நியப் பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதன் மூலம் ‘வோக்கல் ஃபார் லோக்கல்’ இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும், இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்க உதவும் என்றும் அவர் விளக்கினார்.
உலக அளவில் பொருளாதார கடும் பாதிப்பை சந்திக்க கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவுறுத்தல்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
May 11, 2026 10:24 PM IST

