Last Updated:
நாட்டில் பரவியுள்ள வன்முறையைக் கண்டித்து, தாய்மார்களின் கூட்டமைப்பினர் அன்னையர் தினத்தில் போராட்டம் நடத்தினர்.
மெக்ஸிகோவில் நீடித்து வரும் போதைப்பொருள் வன்முறையால் காணாமல் போனவர்களின் தாய்மார்கள் ஆயிரக்கணக்கானோருடன் பேரணியாகச் சென்றனர். ஃபிஃபா உலகக் கோப்பையை இணைந்து நடத்துவதற்கு அந்நாடு தயாராகி வரும் வேளையில், நாட்டில் பரவியுள்ள வன்முறையைக் கண்டித்து, தாய்மார்களின் கூட்டமைப்பினர் அன்னையர் தினத்தில் போராட்டம் நடத்தினர்.
காணாமல் போனவர்களின் படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மெக்சிகோ நகரத்தின் சாலைகளில் போராட்டக்காரர்கள் ஊர்வலமாகச் சென்றனர். மெக்சிகோவில் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். 2006-ஆம் ஆண்டில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்நாடு தொடங்கிய பிறகு, காணாமல் போவது பெருமளவில் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில், காணாமல் போனவர்களின் தேசியப் பதிவேட்டை ஆய்வு செய்தபோது, காணாமல் போனதாகப் பட்டியலிடப்பட்ட 40,000-க்கும் மேற்பட்டோர் உயிருடன் இருக்கக்கூடும் என மெக்சிகோ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் காணாமல் போகும் சம்பவங்கள் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தலைத்தூக்கும் போதைப்பொருள் வன்முறை… அணிதிரண்ட தாய்மார்கள்! மெக்ஸிகோவில் என்ன நடக்கிறது?

