Last Updated:
“மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்ட போதும், சோம்நாத் கோயில் ஒவ்வொரு முறையும் மீண்டும் கட்டப்பட்டது” என்றுள்ளார் பிரதமர் மோடி.
பன்னிரு சிவ திருத்தலங்களில் முதன்மையானது குஜராத்திலுள்ள சோமநாதர் கோயில். புனரமைக்கப்பட்ட இக்கோயிலின் 75-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் சோமநாதர் அமிர்த மகோத்சவக் கொண்டாட்டங்கள் கடந்த 8ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் இன்று (மே 11) கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி, 1998-ல் பொக்ரானில் இந்தியா நடத்திய அணு சோதனைகளை நினைவு கூர்ந்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி, “உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அடிபணியச் செய்ய முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறினார். இன்றைய தினம் சோம்நாத் கோயிலில் விசேஷ் மகா பூஜை, கும்பாபிஷேகம் மற்றும் த்வஜாரோஹண விழாக்களில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் “1998-ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி, அதாவது இதே நாளில் இந்தியா பொக்ரானில் அணு ஆயுத சோதனைகளை நடத்தியது.
#WATCH | Gir Somnath, Gujarat: Prime Minister Narendra Modi says, “On May 11th, the first three nuclear tests were conducted. Our scientists, the champions of India, showcased India’s capabilities to the entire world. It sent shockwaves across the globe. Various sanctions were… pic.twitter.com/7Zp7wgztho
— ANI (@ANI) May 11, 2026
அப்போது உலக வல்லரசு நாடுகள் பல பொருளாதாரத் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து நெருக்கடி கொடுத்தது. இருந்தபோதும், இந்தியா எதற்கும் அஞ்சாமல் மன உறுதியுடன் சவால்களை எதிர்கொண்டது” என்று கூறினார்.
மேலும் பிரதமர் மோடி, “இந்தியாவின் அரசியல் உறுதிப்பாடு உண்மையில் எவ்வளவு அசைக்க முடியாதது என்பதை அது உலகிற்குக் காட்டியது. உலகில் எந்த சக்தியாலும் இந்தியாவை அடக்கவோ பணிய வைக்கவோ முடியாது” என்று கூறினார்.
#WATCH | Gir Somnath, Gujarat: Prime Minister Narendra Modi says, “Today, the sacred land of Prabhas Patan is filled with a divine radiance. This manifestation of Mahadev, the shower of flowers from the sky, the magnificent presentations of art, music, and dance, the chanting of… pic.twitter.com/kmPO8zJIhg
— ANI (@ANI) May 11, 2026
தொடர்ந்து சோம்நாத் கோயில் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “75 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், சோமநாதர் கோயில் புனரமைப்பு என்பது, ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கவில்லை. இந்தியா 1947-ல் சுதந்திரம் அடைந்தது என்றால், 1951-ல் சோமநாதர் கோயில் புனிதப்படுத்தப்பட்டது. இங்கே படையெடுத்து வந்தவர்கள் சோமநாத்தை வெறும் ஒரு பௌதீகக் கட்டமைப்பாகக் கருதி, அதைத் தொடர்ந்து தாக்கினர். மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்ட போதும், சோம்நாத் கோயில் ஒவ்வொரு முறையும் மீண்டும் கட்டப்பட்டது” என்றுள்ளார் பிரதமர்.


