நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகள் முன்னிலையில் ஆசிம் முனீர் பேசினார். அப்போது அவர், “எங்கள் நாட்டுக்கு எதிராக இந்தியா ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். இந்தியாவின் அத்தகைய முயற்சிக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். மிகவும் வலிமையான, பயங்கரமான மற்றும் வலிமிகுந்த விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும்” என நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.


