சட்டைப்பையில் ஜெயலலிதா புகைப்படத்துடன் செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.
தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்வர் விஜய் பதவியேற்பின் போது வந்தது போலவே இன்றும் கோட் சூட்டில் வருகை தந்தார்.
இதில், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில், முதல்வர் ஜோசப் விஜய் உட்பட பேரவையின் புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏவாக பதவியேற்க தொடங்கினர்.
ஜெயலலிதா மீதான பாசம்
இதன்போது ஜெயலலிதாவின் விசுவாசியான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

த.வெ.க.வில் தற்போது அமைச்சராகிய போதும், ஜெயலலிதா மீதான பாசம் அவருக்கு இன்னும் குறையவில்லை.
இதனை பிரதிபலிக்கும் வகையில் இன்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற போது அவரது சட்டைபையில் ஜெயலலிதா படத்தை வைத்துள்ளார்.
நேற்று அமைச்சராக பதவியேற்ற போதும் செங்கோட்டையன் ஜெயலலிதா படத்தை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

