கோலாலம்பூர் :
இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாள்இந்த ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
எனவே ஹஜ்பெருநாள் கொண்டாடப்படும் தேதியை நிர்ணயம் செய்ய வரும் ஜூன் 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரை காப்பாளர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.
ஜுல்ஹிஜ்ஜா மாதத்தின் 1-ஆம் தேதியும் 10 ஆம் தேதியும் பிறை பார்த்தவுடன் இந்த அறிவிப்பு அறிவிக்கப்படும் என்றும், இதனை பொது மக்கள் தொலைக்காட்சி, வானொலியின் வாயிலாக நேரலையில் கண்டறியலாம்.
நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜுல்ஹிஜ்ஜா மாதத்திற்கான பிறை பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


