Last Updated:
அசாம் மாநில பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக, தற்போதைய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அசாம் முதலமைச்சராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஹிமந்த பிஸ்வா சர்மா வருகிற 12 ஆம் தேதி பதவியேற்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 82 இடங்களை வென்றது.
கவுகாத்தியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பார்வையாளர்கள் ஜே.பி. நட்டா, நயாப் சிங் சைனி முன்னிலையில் அசாம் மாநில பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக, தற்போதைய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார்.
செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


