• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

விஜய் பதவியேற்பு விழா – ராகுல் காந்தி பங்கேற்கிறார் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 10, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
விஜய் பதவியேற்பு விழா – ராகுல் காந்தி பங்கேற்கிறார் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிலான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தேவைப்பட்டதால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. த.வெ.க.வின் அழைப்பை ஏற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக அறிவித்தன.

தொடர்ந்து, நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று வி.சி.க. மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தன. இதன் மூலம் த.வெ.க. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்ததை தொடர்ந்து, த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் தலைவர்களுடன் கவர்னரை சந்தித்த விஜய், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

மேலும், த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் கடிதங்களை கவர்னரிடம் த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார். அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட கவர்னர், த.வெ.க. தலைமையிலான அரசு நாளை பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

சென்னை பெரியமேடு அருகே உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கவர்னர் அர்லேகர் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். இந்நிலையில், விஜய்யின் பதவியேற்பு விழாவில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

 காலை 8.30 மணியளவில் அவர் சென்னை வர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 1967-க்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க உள்ளது. த.வெ.க.வின் அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

ஜாலான் அம்பாங் டவரில் இருந்து விழுந்தவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை | Makkal Osai

Next Post

Tamilmirror Online || தென்கடலில் விபத்துக்குள்ளான மீனவர் மீட்பு

Next Post
Tamilmirror Online || தென்கடலில் விபத்துக்குள்ளான மீனவர் மீட்பு

Tamilmirror Online || தென்கடலில் விபத்துக்குள்ளான மீனவர் மீட்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin