• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கபில சந்திரசேன மரணத்தின் பிரேத பரிசோதனை! ஆராயப்படவுள்ள நிபுணத்துவ அறிக்கை

GenevaTimes by GenevaTimes
May 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கபில சந்திரசேன மரணத்தின் பிரேத பரிசோதனை! ஆராயப்படவுள்ள நிபுணத்துவ அறிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சடலமாக மீட்கப்பட்ட சிறிலங்கா எயார் லைன்ஸின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நேற்று (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைவாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் நியமித்த கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி சிறியந்த அமரரத்ன தலைமையிலான ஐவர் கொண்ட குழு இந்த பிரேத பரிசோதனையை முன்னெடுத்திருந்தது.

கொழும்பு, சட்ட வைத்திய மற்றும் நச்சு ஆய்வியல் நிலையத்தினால் இந்த நடவடிக்கைகள் முற்பகல் முதல் இடம்பெற்றன.

பரிசோதனை அறிக்கை

அதன்படி, இந்த பிரேத பரிசோதனை அறிக்கை, திங்கட்கிழமை (11) கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கபில சந்திரசேன மரணத்தின் பிரேத பரிசோதனை! ஆராயப்படவுள்ள நிபுணத்துவ அறிக்கை | Post Mortem Examination Kapila Chandrasena Death


கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் மரண விசாரணைகளில் இந்த அறிக்கை நிபுணத்துவ சான்றாக ஆராயப்படவுள்ளது.


இதனிடையே கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் கொள்ளுப்பிட்டி காவல்துறையினரிடம் இருந்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு மாற்றப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் இந்திக்க லொக்குஹெட்டியின் கீழ் சிறப்புக் குழுவொன்று இந்த மரணம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

சந்திரசேனவின் மரணம்

இதன்படி எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 54 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் செல்ல அனுப்பப்பட்ட கபில சந்திரசேன மீண்டும் கைது செய்வதற்கு கடந்த ஏழாம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், கடந்த எட்டாம் திகதி காலையில் கபில சந்திரசேனவின் சடலம் கொள்ளுப்பிட்டி பேதரிஸ் மாவத்தையில் உள்ள 37ஆம் இலக்கமுடைய முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டீ சில்வாவின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் கபில சந்திரசேனவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பதைக் கண்டறிவதற்கு சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

முன்னாள் இந்திய வர்த்தக சபை தலைவர் கென்னத் ஈஸ்வரன் காலமானார் – Malaysiakini

Next Post

முக்கியமான மெசேஜ்களை இனி தவறவிடாதீர்கள்… வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய வசதி | Makkal Osai

Next Post
முக்கியமான மெசேஜ்களை இனி தவறவிடாதீர்கள்… வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய வசதி | Makkal Osai

முக்கியமான மெசேஜ்களை இனி தவறவிடாதீர்கள்… வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய வசதி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin