மத்திய கிழக்கில் நிலவி வரும் அமெரிக்காவுடனான போருக்குப் பிறகு ஈரான் மற்றும் சீனா இடையேயான இருதரப்பு உறவுகள் மேலும் விரிவானதாக சீனாவுக்கான ஈரான் தூதர் அப்துல்ரெஸா ரஹ்மானி தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த உறவுகள் ஆழமானதாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் மாறும் என்று கூறியதுடன், கடினமான காலங்களில் ஈரானுக்குத் துணையாக நின்றதற்காக சீனாவை அவர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் உரையாற்றிய அவர்,
ஈரானின் நண்பர்கள்
“சீனர்கள் கடினமான காலங்களில் ஈரானின் நண்பர்களாக இருந்து, இக்கட்டான சூழ்நிலைகளில் எங்களுக்கு உதவி செய்தது.

எங்கள் மக்களுக்குத் துணையாக சீனர்கள் நின்றனர்.
நாங்களும் எங்கள் கடினமான கால நண்பர்களை மறக்க மாட்டோம்,
சீனா ஈரானின் மூலோபாய பங்காளி மற்றும் நெருங்கிய நண்பர்.
இந்நிலையில் தற்போதைய மோதல் முடிவுக்கு வந்தவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும்” என்றார்.
அமெரிக்கா தலைமையிலான கடற்படை முற்றுகை உட்பட, ஈரான் மீது அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தூதரின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
