• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‛‛All Eyes On RAFAH’’ ஒரே போஸ்ட்டில் கவனம் பெற்ற திரிஷா – சமந்தா! பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடிகைகள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 29, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
‛‛All Eyes On RAFAH’’ ஒரே போஸ்ட்டில் கவனம் பெற்ற திரிஷா – சமந்தா! பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடிகைகள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காசா: இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் 9வது மாதமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சமூக வலைதள பக்கங்களில் All Eyes On RAFAH என்பது டிரெண்டாகி வரும் நிலையில் நடிகை திரிஷா மற்றும் சமந்தா ஆகியோர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தங்களின் இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.அண்டை நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் அமைப்புகள் இடையே தான் தொடர்ந்து மோதல் நீடித்து வந்தது.இதையடுத்து இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை போராக இஸ்ரேல் அறிவித்து தொடர்ந்து வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் தற்போது வரை 35 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். ஒட்டுமொத்த காசா நகரமும் உருக்கலைந்துவிட்டது. காசா நகரில் உள்ள மக்கள் பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.மேலும் காசாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரமான ரஃபாவில் சுமார் 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். காசா உள்ளிட்ட போர் நடக்கும் பகுதிகளில் இருந்து இங்கு அதிகமான மக்கள் குடிபெயர்ந்துள்ளனர். இதற்கிடையே தான் பல மாதங்களுக்கு பிறகு கடந்த 26ம் தேதி ஹமாஸ் சார்பில் இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மீது மிகப் பெரிய ஏவுகனை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல ஏவுகனைகள் இஸ்ரேலின் தொழில்நுட்பத்துடன் இடைமறிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.

இதனால் இஸ்ரேலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.இருப்பினும் கூட ஹமாசின் இந்த தாக்குதல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கொதிப்படைய செய்தது. இதையடுத்து அவர் உடனடியாக ரஃபா பகுதியில் பதுங்கி உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து இஸ்ரேல் படைகள் ரஃபா பகுதியில் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது பொதுமக்களின் முகாம் தீப்பற்றி எரிந்தது. ரஃபாவில் உள்ள பொதுமக்கள் முகாம் எரிந்ததில் குழந்தைகள் உள்பட 45 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேலுக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல உலக நாடுகள் இஸ்ரேலை கண்டித்துள்ளதோடு, போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது.

அதோடு சர்வதேச நீதிமன்றமும் போரை நிறுத்த வலியுறுத்தி உள்ளது. ஆனால் இஸ்ரேல் போரை கைவிடுவதாக இல்லை. இதற்கிடையே தான் ரஃபாவில் பொதுமக்கள் வசிக்கும் முகாம் எரிந்தது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‛‛பொதுமக்கள் முகாம் மீதான தாக்குதல் என்பது துரதிர்ஷ்டவசமானது” என தெரிவித்துள்ளார். ஆனாலும் இஸ்ரேல் தொடர்ந்து ஹமாசுக்கு எதிராக காசாவில் போரை தொடர்ந்து வருகிறது.

Previous articleகாணாமல் போன வாலிபர் ப்ரோகா ஹில்லில் இறந்து கிடக்க கண்டெடுப்பு



Read More

Previous Post

ஏழை மாணவர்களுக்கான அன்னதான உணவை சாப்பிட்ட சர்ச்சை: கனடா வாழ் இந்திய வம்சாவளியின் வங்கி வேலை பறிபோனது | Controversy over eating student s food Canada Indian origin banker lose bank job

Next Post

மழையும் காற்றும் மேலும் தொடரும் என எதிர்பார்ப்பு

Next Post
மழையும் காற்றும் மேலும் தொடரும் என எதிர்பார்ப்பு

மழையும் காற்றும் மேலும் தொடரும் என எதிர்பார்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin