Last Updated:
சோம்நாத் கோயிலின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், சோம்நாத் கோயிலின் கலாச்சார சிறப்புகள் குறித்து விளக்கியுள்ளார்.
சோம்நாத் கோயிலின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், சோம்நாத் கோயிலின் கலாச்சார சிறப்புகள் குறித்து விளக்கியுள்ளார்.
சோம்நாத் கோயிலின் 75 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி அந்த கோயிலுக்கு செல்ல இருக்கிறார். இதையொட்டி அவர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஏராளமான சவால்களை எதிர்கொண்ட போதும், சோம்நாத்தைப் பாதுகாப்பதிலும் அதன் பெருமையை மீட்டெடுப்பதிலும் உறுதியுடன் செயல்பட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாக பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மே 11-ம் தேதி சோம்நாத்துக்கு நான் மேற்கொள்ளவிருக்கும் பயணம் இந்த நாளின் முக்கியத்துவம் குறித்தும், சோம்நாத்தின் கலாச்சார பாரம்பரிய சிறப்புகள் ஆகியவை குறித்து, சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். அனைத்துவிதமான சவால்களை எதிர்கொண்ட போதும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு சோம்நாத்தை பாதுகாத்து அதனை மீட்டெடுத்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
पुनर्निर्मित सोमनाथ मंदिर के लोकार्पण की 75वीं वर्षगांठ के उपलक्ष्य में 11 मई को मुझे एक बार फिर वहां जाने का सौभाग्य मिलने वाला है। यह अवसर हमें स्मरण कराता है कि इस पावनस्थल की रक्षा और इसके पुनर्निर्माण के लिए किस प्रकार देश की कई पीढ़ियों ने निरंतर संघर्ष किया। देशवासियों के…
— Narendra Modi (@narendramodi) May 8, 2026
சோமநாதர் கோயில் குஜராத்தில் உள்ள பிரபாசா நகரில் அமைந்துள்ளது. இது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும்.1951-ல் ராஜேந்திர பிரசாத்தால் கோயில் திறக்கப்பட்டது. இதன் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாட, வரும் மே 11 அன்று அந்த கோயிலுக்கு செல்கிறார் பிரதமர் மோடி. சோமநாதர் கோயிலைப் பாதுகாப்பதற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களையும், அதன் புனரமைப்பில் பங்கேற்றவர்களையும் நினைவு கூர்வதாக பிரதமர் மோடி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


