Last Updated:
இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் தரையிறங்க வந்த விமானம் நெடுஞ்சாலையில் சென்ற லாரி மீது உரசிச் சென்றுள்ளது.
United Airlines-க்கு சொந்தமான Boeing 767 ரக விமானம் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க தயாரானது. அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், நெடுஞ்சாலையில் சென்ற லாரியின் முன்பக்கத்தில் மோதியது. விமானத்தின் டயர்கள் லாரியின் முன்பக்கத்தில் மோதியதில் ஓட்டுநர் லேசான காயத்துடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
New surveillance and dash‑cam footage shows a United Airlines Flight UA169 (Boeing 767) striking a bakery truck on the New Jersey Turnpike during its landing approach to Newark Liberty Liberty International Airport, New Jersey.
The truck driver suffered only minor injuries, the plane… pic.twitter.com/57YI0zhNK4— GeoTechWar (@geotechwar) May 5, 2026
லாரி மீது விமானத்தின் டயர்கள் உரசியதன் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக United Airlines நிறுவனம் தெரிவித்துள்ளது.
May 08, 2026 11:00 AM IST
New Jersey | நெடுஞ்சாலையில் சென்ற வாகனத்துடன் உரசிச்சென்ற விமானம்… வெளியான பரபரப்பு காட்சி!


