புதிய இணைப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் உயிருக்கு ஆபத்து என காவல் நிலையத்தில் காங்கிரஸ் முறைப்பாடு அளித்துள்ளது.
விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் டிஜிபி-யிடம் சென்னை மேற்கு காங்கிரஸ் தலைவரும் கவுன்சிலருமான டில்லிபாபு முறைப்பாடு அளித்துள்ளார்.
இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, அவருக்கும் விஜய்யுடன் கைகோர்த்திருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்புப் பிரிவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்ட முக்கியத் தலைவர் என்ற ரீதியிலும் விஜய்க்கு அரசு சார்பில் நான்கு விசேட பாதுகாப்பு வாகனங்கள் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டு வந்த விசேட பாதுகாப்பு வாகனங்கள் திடீரென திரும்பப் பெறப்பட்டுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பாதுகாப்பு வாகனங்கள்
பாதுகாப்பு வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டது மட்டுமல்லாமல், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள விஜய்யின் நீலாங்கரை இல்லத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பேரிகார்டுகளும் அகற்றப்பட்டுள்ளன.

வழக்கமாகப் பொதுமக்களைக் கட்டுப்படுத்தவும், தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தடுப்புகள் நீக்கப்பட்டது, அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு முழுமையாக வாபஸ் பெறப்பட்டதைக் காட்டுகிறது.
விஜய்க்கு வழங்கப்பட்ட விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏன் திடீரென விலக்கப்பட்டன என்பது குறித்து முறையான விளக்கங்கள் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.
பனையூரில் ஆலோசனை கூட்டம்
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

