ஹோர்முஸ் நீரிணையை நோக்கிச் சென்ற ஈரானிய எண்ணெய் கப்பல் ஒன்றையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்திற்கு எதிரே நீரிணைக்குள் நுழைந்த மற்றுமொரு கப்பலையும் அமெரிக்கா இலக்கு வைத்துள்ளதாக ஈரானின் காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்கா போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளின் ஒத்துழைப்புடன் கமீர், சிரிக் மற்றும் கெஷ்ம் தீவுப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் அந்த குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடுமையான பதிலடி
இதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கேயும் சாபஹார் துறைமுகத்திற்குத் தெற்கேயும் இருந்த அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மீது ஈரானிய இராணுவம் உடனடித் தாக்குதல்களை நடத்தியதுடன், அவற்றுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

image Credit: The New Arab
இதன்படி, எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் எவ்விதத் தயக்கமும் இன்றி ஈரான் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும் என அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
