ஒரு மாதத்தில் பிஎஃப் கணக்கிலிருந்து எத்தனை முறை பணம் எடுக்கலாம்? EPFO இது தொடர்பாக எந்த குறிப்பிட்ட வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. நீங்கள் விரும்பினால், ஒரு மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கூட பணம் எடுக்கக் கோரலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் பணம் எடுப்பதற்கு நீங்கள் வெவ்வேறு காரணங்களைக் காட்ட வேண்டும். உதாரணமாக, உடல்நலக்குறைவு, வீடு வாங்க அல்லது கட்ட, குழந்தைகளின் கல்வி அல்லது திருமணம் என்று காரணங்கள் இருக்க வேண்டும். இந்தக் காரணங்களின் அடிப்படையில் PF-லிருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

