Last Updated:
ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, பிரான்ஸ் தனது அணுசக்தி விமானம் தாங்கிய கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்காவின் டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் புரட்சிகரப் படை தெரிவித்துள்ளது.
ஈரான் உடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினாலும், பிரதான பிரச்சனைகளில் இருதரப்பினர் இடையே சுமூக தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்காவின் ரீப்பர் வகை டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் புரட்சிகரப் படை தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, பிரான்ஸ் தனது அணுசக்தி விமானம் தாங்கிய கப்பலை அனுப்பி வைத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கடல் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இணைந்து பல்வேறு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

