மானியம்: ஓபிசி/எஸ்சி/எஸ்டி/ மாற்றுத் திறனாளிகள்/சிறுபான்மையினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு ஒட்டுமொத்த திட்டத் தொகையில் 25% (நகர்ப்புறங்களுக்கு), 35% (கிராம புறங்களுக்கு) மானியமாக வழங்கப்படும். அதவாது, 50 லட்சம் திட்டம் மதிப்பீட்டில், கிட்டத்தட்ட 17.5 லட்சம் ரூபாயை மானியமாக அரசு செலுத்தும், இதர தொகையை வங்கியிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.தொழில் முனைவோர் தங்கள் பங்களிப்பு நிதியாக வெறும் 5% நிதி அளித்தால் போதும். பொதுப் பிரிவினருக்கு இது 10% ஆகும். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிமுறையின் படி, ரூ.10 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு அடமானம் தேவையில்லை.


