தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தேவையான
118 என்ற பெரும்பான்மைக்காக விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஏனைய கட்சிகளின் ஆதரவுக்கு ஒடும் நிலையில் அதன் ஆட்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாக கொங்கிரஸ் கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துக்கொண்டது.
அத்துடன் பூங்கொத்துடன் அதன் மூத்த தலைகளும் அதன் புதிய சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று விஜய்யிடம் ஓடோடி சந்திப்பை நடத்திய காட்சிகளுடன்
நீண்டகால கொங்ரஸ் – தி.மு.க கூட்டணி டமாலாகியும் விட்டது.
கொங்கிரஸ் எடுத்த இந்த முடிவு, தமது முதுகில் குத்தும் செயல் என திமுக சீறினாலும் கொங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவு வெளியாகி 2 நாட்களுக்கிடையில் தி.மு.க – கொங்ரஸ் கூட்டணி பிளவடைந்தமை 2009 இல் ஈழத்தமிழர்களின் முள்ளிவாய்கால பேரவல நாட்களில் அந்த கூட்டணியை கண்ட ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்கால் பேரவலத்தின் மே 18 நெருங்கும் வேளையில் அந்த அணி டமாலாக மாறுவதை நோக்கும் நிலையில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

