இந்த உயர்விற்கான முக்கிய காரணமாக உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் கொள்கை மாற்றம் பார்க்கப்படுகிறது. பல நாடுகள் தங்களின் நாணய இருப்புகளில் தங்கத்தின் பங்கை 30% இலிருந்து 40% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன. அதே நேரத்தில், அமெரிக்க டாலர் இருப்பை 60% இலிருந்து 40% ஆக குறைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், டாலருக்குப் பதிலாக தங்கத்தை பாதுகாப்பான முதலீட்டு கருவியாக நாடுகள் அதிகம் விரும்பத் தொடங்கியுள்ளன. முன்னதாக சீனா, ரஷ்யா, இந்தியா, துருக்கி போன்ற நாடுகள் மட்டுமே அதிக அளவில் தங்கம் வாங்கி வந்த நிலையில், தற்போது கசகஸ்தான், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளும் தங்க சேமிப்பை அதிகரித்து வருகின்றன. இந்த உலகளாவிய தேவையே எதிர்காலத்தில் தங்கம் விலையை மேலும் உயர்த்தும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.


