Last Updated:
இன்று இரவு முதலே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் சபோரிசியா நகர் மீது அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதில், கட்டமைப்புகள், கார் பழுதுபார்க்கும் நிலையம் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்தத் தாக்குதல் காரணமாக கடும் தீ பரவியது. மீட்புப் படையினர் வந்தடைந்த நிலையில், ட்ரோன்கள் மூலம் இரண்டாவது கட்டத் தாக்குதலை ரஷ்யப் படைகள் மேற்கொண்டதாக சபோரிசியா நகர கவுன்சில் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 20 பேர் காயமடைந்தனர்.
போர் (AI Generated Image)
இதனிடையே, இரண்டாம் உலகப் போரில் நாசி ஜெர்மனி படையை சோவியத் யூனியன் வீழ்த்தியதை கொண்டாடும் வகையில், வரும் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. எனினும், இன்று இரவு முதலே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.


