ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்பதற்காக பல்வேறு நாடுகளிடமிருந்து அமெரிக்காவிற்கு பகிரங்கமாகவும், தனிப்பட்ட ரீதியிலும் கோரிக்கைகள் வந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து உலக நாடுகளுக்கு உதவ ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வந்துள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாகவே Project Freedom என்ற திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த திட்டமானது ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக அமையும் என்று ரூபியோ சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதி முயற்சி
மேலும், ஈரானின் தற்போதைய நடவடிக்கைகள் ஒரு பொருளாதாரத் தீவைப்பு போன்றது எனவும், அதன் இறுதி முயற்சியை முறியடிக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Image Credit: CNN
அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டதால் மட்டும் இந்த நடவடிக்கையில் இறங்கவில்லை எனவும், இந்த இக்கட்டான நிலையைச் சீர்செய்யும் வல்லமை படைத்த ஒரே நாடு அமெரிக்கா என்பதால் தாங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் ரூபியோ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

