ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், ஹோர்முஸ் விவகாரத்தில் ஒரு புதைகுழியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் விவகாரத்தில் சமீபத்தில் நிகழ்ந்த மோதல்கள், அரசியல் நெருக்கடிகளுக்கு ராணுவ ரீதியாக ஒருபோதும் தீர்வு காண முடியாது என்பதைத் தெளிவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திங்களன்று தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அராக்சி, பாகிஸ்தானின் நன்முயற்சியால் இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் போர்ச் சூழல்
இருப்பினும், சில தீய சக்திகளின் தூண்டுதலால் மீண்டும் ஒரு போர்ச் சூழலுக்குள் அமெரிக்காவும் ஐக்கிய அரபு அமீரகமும் ஈர்க்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Events in Hormuz make clear that there’s no military solution to a political crisis.
As talks are making progress with Pakistan’s gracious effort, the U.S. should be wary of being dragged back into quagmire by ill-wishers. So should the UAE.
Project Freedom is Project Deadlock.
— Seyed Abbas Araghchi (@araghchi) May 4, 2026
மேலும், வளைகுடாப் பகுதியிலிருந்து வணிகக் கப்பல்களை வெளியேற்றும் அமெரிக்காவின் Project Freedom என்ற திட்டத்தை விமர்சித்த அவர், அந்தத் திட்டம் உண்மையில் அமைதி பேச்சுவாரத்த்தைக்கு ஒரு முட்டுக்கட்டை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு மாத காலமாக நீடித்து வந்த போர்நிறுத்த ஒப்பந்தம் நிலைகுலையும் வகையில், அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கு இடையே அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து அராக்சியின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

