• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

த.வெ.க.விற்கு ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல்! மீண்டும் தி.மு.க.வுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

GenevaTimes by GenevaTimes
May 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
த.வெ.க.விற்கு ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல்! மீண்டும் தி.மு.க.வுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



தனது முதல் தேர்தலிலேயே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்த போதிலும், த.வெ.க.வால் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்ட முடியவில்லை.



தற்போது 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், ஆட்சி அமைப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

அவசியமாகியுள்ள 12 உறுப்பினர்கள்



குறிப்பாக, த.வெ.க. தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், அவர் சட்டப்படி ஒரு தொகுதியில் பதவி விலக வேண்டும்.

த.வெ.க.விற்கு ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல்! மீண்டும் தி.மு.க.வுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு | Tvk Vijay Election Results Trouble Forming A Govt



மேலும், அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராக நியமிக்கப்படும்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வாக்களிக்க முடியாது என்பதால், த.வெ.க.வின் பலம் மேலும் குறையும்.இதனால் த.வெ.க. ஆட்சி அமைக்க கூடுதலாக 12 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகிறது.

தற்போதைய தேர்தல் நிலவரப்படி, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், பா.ம.க., வி.சி.க. உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவைப் த.வெ.க பெற்றால் அக்கட்சியின் பலம் 129 வரை உயர வாய்ப்புள்ளது.

தி.மு.க.வுக்கு வாய்ப்பு



இந்தச் சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் த.வெ.க. தலைவரை அழைத்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரலாம் என்றும் ஆதரவு தரும் கட்சிகளின் கடிதங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

த.வெ.க.விற்கு ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல்! மீண்டும் தி.மு.க.வுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு | Tvk Vijay Election Results Trouble Forming A Govt


இந்நிலையில், த.வெ.க. பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெற்ற தி.மு.க.வுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்படும்.

அவர்களாலும் முடியாத பட்சத்தில், தமிழகத்தில் 6 மாத கால ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு, மீண்டும் 234 தொகுதிகளுக்கும் பொதுத்தேர்தல் நடத்தப்படும் சூழல் உருவாகும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அலோர் காஜா அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 இந்தியப் பயணிகள் உயிர் தப்பினர் | Makkal Osai

Next Post

கிளந்தான் எல்லையில் பெத்தாய் (Petai) கடத்தல் முறியடிப்பு

Next Post
கிளந்தான் எல்லையில் பெத்தாய் (Petai) கடத்தல் முறியடிப்பு

கிளந்தான் எல்லையில் பெத்தாய் (Petai) கடத்தல் முறியடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin