Last Updated:
9 நாட்களுக்கு தேவையான 53 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பில் இருப்பதாக மத்திய மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என மத்திய மின்சாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், மின்விநியோகக் கட்டமைப்புத் தோல்வியால் மின் தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வதந்தி பரவியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய மின்சாரத்துறை, தற்போது 19 நாட்களுக்கு தேவையான 53 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மின்வாரியம்
நாட்டில் கடந்த 2ஆம் தேதி 229 கிகா வாட் மின்சாரம் நுகரப்பட்டதாகவும், இதில் 135 கிகா வாட் அனல் மின் நிலையங்கள் மூலமும், 59 கிகா வாட் சோலார் மூலமும், 16 கிகா வாட் காற்றாலை மின் உற்பத்தி மூலமும் பூர்த்தி செய்யப்பட்டதாகக் கூறியுள்ளது. அதிகபட்சமாக இந்த ஆண்டு 256 கிகா வாட் மின் நுகர்வு இருந்தபோதும் எந்தவித பற்றாக்குறையும் இன்றி மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாகவும் மின்சாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
மே மாதத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெயில் இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் மின் தேவை அதிகரிக்கும் சூழல் நிலவுவதால் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என மின்சாரத் துறை உறுதிப்பட தெரிவித்துள்ளது.
May 04, 2026 10:02 AM IST

