தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கேரளத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்குமா அல்லது கங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அசாமில் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கும் நிலையில், மக்கள் தீர்ப்பு வெளியாகவுள்ளது. புதுச்சேரியில் ஆளும் என்.டி.ஏ. கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் பலப்பரீட்சை நடத்திய சூழலில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

