Last Updated:
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி கொல்கத்தா அணி வீரர்கள் களம் இறங்கினர்.
ஐபிஎல் 2026 தொடரின் 45-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அபார வெற்றி பெற்றது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தாவின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக 61 ரன்களும், இஷான் கிஷன் 42 ரன்களும் சேர்த்த போதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 15 ரன்களும், கிளாசன் 11 ரன்களும் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஆகியோரின் சுழற்பந்துவீச்சில் சிக்கிய ஐதராபாத் அணி, 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வருண் 3 விக்கெட்டுகளையும், சுனில் நரேன், கார்த்திக் தியாகி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி கொல்கத்தா அணி வீரர்கள் களம் இறங்கினர்.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அஜிங்யா ரகானே 43 ரன்களும் , பின் ஆலன் 29 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தனர். அங்ரிஷ் ரகுவன்ஷி 59 ரன்களும், ரின்கு சிங் 22 ரன்களும் சேர்க்க 18.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
உள்ளூர் மைதானத்தில் வலுவான ஐதராபாத் அணி தோல்வியடைந்திருப்பது அந்த அணியின் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.


