டி20 கிரிக்கெட்டில் 30, 40 பந்துகளில் சதமடிக்கும் நிலையில், 70 பந்துகளில் சதமடித்து மிக மெதுவான சதமடித்த வீரர் என்ற பெயர் பெற்றுள்ளார் அயர்லாந்து வீரர் பால் ஸ்டர்லிங். ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில், ஸ்டர்லிங் 75 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தார்; இதில் 8 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். 2021-ல் படைக்கப்பட்ட இந்தச் சாதனையை, இன்றும் யாராலும் முறியடிக்க முடியவில்லை.


