இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னையில் நடைபெற்ற குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இதற்கமைய நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
வெற்றி இலக்கு
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் நமன் தீர் 57 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் அன்சுல் கம்போஜ் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தநிலையில் 160 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 67 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

