Last Updated:
இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகள் மற்றும் +0.005 நெட் ரன்ரேட்டுடன் சென்னை அணி 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர். இதையடுத்து தொடக்க வீரர்களாக இறங்கிய மும்பை அணியில் வில் ஜாக்ஸ் 1 ரன்னும் ரியான் ரிக்கெல்டன் 37 ரன்களும் எடுத்தனர். அடுத்து இணைந்த நமன் திர் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் செய்து ரன்களை உயர்த்தினர். சூர்யகுமார் 21 ரன்களில் ஆட்டமிழக்க அரைச்சதம் கடந்த நமன் திர் 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்தவர்களில் ஹர்திக் பாண்ட்யா 23 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியில் அன்சுல் கம்பாஜ் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 11 ரன்னில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 67 ரன்களும், உர்வில் படேல் 12 பந்துகளில் 24 ரன்களும், கார்த்திக் சர்மா 54 ரன்களும் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
18.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சென்னை அணி 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 8 புள்ளிகள் மற்றும் +0.005 நெட் ரன்ரேட்டுடன் சென்னை அணி 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
May 02, 2026 11:50 PM IST


