Last Updated:
அணியில் பார்தி ஃபுல்மாலி, நந்தனி சர்மா, ஸ்ரீ சாருணி மற்றும் கிராந்தி கௌட் ஆகிய நான்கு வீராங்கனைகள் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி, தற்போது ஜூன் 12-ம் தேதி தொடங்கவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களம் இறங்குகிறது. இந்த முக்கிய தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ (BCCI) இன்று அறிவித்துள்ளது.
அனுபவம் வாய்ந்த வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஐந்தாவது முறையாக உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். கடந்த காலங்களில் கோப்பைக்கு மிக அருகில் வந்து நழுவவிட்ட இந்திய அணிக்கு, இம்முறை முதல் டி20 உலகக்கோப்பையை வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
மேலும் பேட்டர்களான ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் ஆகியோர் அணியில் இடம்பெற்று அணிக்கு பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சுப் பிரிவில் தீப்தி சர்மா மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர்.
இந்த அணியில் பார்தி ஃபுல்மாலி, நந்தனி சர்மா, ஸ்ரீ சாருணி மற்றும் கிராந்தி கௌட் ஆகிய நான்கு வீராங்கனைகள் முதல்முறையாக ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது அணியின் இளமை மற்றும் அனுபவத்தின் கலவையாகப் பார்க்கப்படுகிறது.
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பார்தி ஃபுல்மாலி, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சாருணி, யாஸ்திகா பாட்டியா, நந்தனி சர்மா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், கிராந்தி கௌட், ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் ராதா யாதவ்

