Last Updated:
மெக்சிகோவில் கழுதைகளுக்கு என்று ஓட்டப் பந்தயம், உடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
மெக்சிகோவில் கழுதைகளுக்காக நடத்தப்பட்ட திருவிழாவில் விதவிதமான அலங்காரத்தில் கழுதைகள் அணிவகுத்துச் சென்றுள்ளன.
மெக்சிகோ நாட்டின் ஒடும்பா (Otumba) நகரில் வசிக்கும் மக்கள் தங்களின் வேலைகளுக்காக கழுதைகளையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தங்களுக்காகக் கடுமையாக உழைக்கும் கழுதைகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் தொழிலாளர் தினத்தன்று தேசிய கழுதை திருவிழா நடத்தி வருகின்றனர்.
கழுதைகளுக்காக நடத்தப்பட்ட திருவிழா
அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான கழுதைகள் பங்கேற்றன. கழுதைகளுக்கு என்று ஓட்டப் பந்தயம், உடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தேனீயைப் போல உடை அணிந்து அணிவகுத்துச் சென்ற ‘பெக்கி’ என்ற கழுதை முதல் பரிசை தட்டிச் சென்றது.

