நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வாக பதிவாகியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 4,617 டெங்கு நோய்த்தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயால் 12 பேர் உயிரிழப்பு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சில நாட்களுக்கு முன்பு இரத்தினபுரி மாவட்டத்தில் ஒருவர் டெங்குநோய் காரணமாக உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும், டெங்கு நோய்த்தொற்றுகளை தடுக்கும் நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

