அட்சய திருதியை தினம் என்பது பூமியில் விஷ்ணு, மனித அவதாரம் எடுத்த நாளாகக் கருதப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாளில் புதிய முதலீடு செய்வது அதிர்ஷ்டம் தரும் என்றும், மங்களகரமான நிகழ்வுகளுக்கு ஏற்ற நாளாகவும் மக்களால் நம்பப்படுகிறது.
அட்சய திருதியை நாளில், தங்கம் வாங்கினால், செல்வ வளம் பன்மடங்கு பெருகும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்ட காரணத்தால், அட்சய திருதியை நாளான இன்று மதுரையில் காலையில் இருந்தே தங்க நகைகளை வாங்குவதற்காக மக்கள் நகைக் கடைகளுக்குப் படையெடுத்துச் சென்றபடி உள்ளனர்.
அந்த வகையில் மதுரையில் உள்ள தங்க நகைக் கடை ஒன்றில் இந்த ஆண்டிற்கான அட்சய திருதியை விற்பனை குறித்துக் கடை நிர்வாகி கூறுகையில், “இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் மிகவும் பெருகும் என்பதால் காலையிலிருந்து மக்கள் அதிகமாக வருகை தருகின்றனர். இந்நாளில் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூபாய் 6 ஆயிரத்து 800 ரூபாய் என்ற விலையில் இருக்கின்றது.
இதையும் படிங்க: லட்சுமி கடாட்சம் பெருக்கும் அட்சய திருதியை தினம்… தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா..?
தங்கம் விலை இந்த அளவிற்கு உயர்வாக இருந்த போதிலும் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மக்கள் அட்சய திருதியை நாளில் தங்கத்தை வாங்குவதற்கு அதிக ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். மேலும், அட்சய திருதியை தினச் சலுகையாக இந்த ஆண்டு தங்கம் கிராமிற்கு ரூ.150 முதல் 200 ரூபாய் என்ற வகையில் விலையைக் குறைத்துக் கொடுக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)