தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனநாயக மக்கள் அதிகாரம் என்னும் தலைப்பின் கீழ்
ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின பேரணியும், கூட்டமும் இன்று
வெள்ளிக்கிழமை(01.05.2026) அமைச்சர் சுனில் ஹிந்து நெத்தி தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான தொழிலாளர் தின ஊர்வலமானது
நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று மட்டு காந்தி பூங்காவைச் சென்றடையந்தது.
பின்னர் மே தின கூட்டம் இடம்பெற்றது.
இந்த தொழிலாளர் தின பேரணியில் தொழிலாளர்களது உரிமைகள் அடங்கிய பதாகைகளை
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தி சென்றனர்.
தேசிய மக்கள் சக்தி
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கந்தசாமி பிரபு, பிரதேச அமைப்பாளர்கள், தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், மதத்
தலைவர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் கலை கலாசார நிகழ்வுகளும் தொழிலாளர் தின
சிறப்புரைகளும் இதன்போது இடம்பெற்றுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

