Last Updated:
காங்கிரஸ் கூட்டணி 40 சதவீத வாக்குகளையும், இடதுசாரிகள் கூட்டணி 38 சதவீத வாக்குகளையும், பாஜக 20 சதவீத வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக Today’s Chanakya கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தையை கருத்துக்கணிப்பு முடிவுகளை Today’s Chanakya நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரளத்தில் காங்கிரஸ் 60 முதல் 78 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் இடதுசாரிகள் கூட்டணி 55 முதல் 73 தொகுதிகள் வரை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத நிலையில், 11 தொகுதிகள் வரை பாஜக வெல்லக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி 40 சதவீத வாக்குகளையும், இடதுசாரிகள் கூட்டணி 38 சதவீத வாக்குகளையும், பாஜக 20 சதவீத வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என Today’s Chanakya கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பாஜக அதிகபட்சமாக 111 தொகுதிகளையும், காங்கிரஸ் அதிகபட்சமாக 32 தொகுதிகளையும் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 50 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 38 சதவீத வாக்குகளையும் பெறும் என Today’s Chanakya கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

