• Login
Friday, May 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நடத்தையில் சந்தேகம்.. கடற்கரையில் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 30, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நடத்தையில் சந்தேகம்.. கடற்கரையில் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 30, 2026 9:44 PM IST

கடற்கரை மணலுக்குள் புதைக்கப்பட்ட சடலத்தின் பாதி கால் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு இருந்த நாய் ஒன்று அந்த உடலைக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தது.

பாத்திமா - முகமது
பாத்திமா – முகமது

கேரளாவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கழுத்து நெரித்து கொன்று கடற்கரை மணலில் புதைத்த கணவனை, போலீசார் கைது செய்தனர். 

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி கடற்கரை பகுதியில், தெருநாய்கள் எதையோ கவ்வி இழுப்பதைக் கண்ட பொதுமக்கள் அங்கு என்ன இருக்கிறது? என உற்று பார்த்தனர். அப்போது அந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் கடற்கரை மணலுக்குள் புதைக்கப்பட்ட சடலத்தின் பாதி கால் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு இருந்த நாய் ஒன்று அந்த உடலைக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து அங்கிருந்தவர்கள் பொன்னானி காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தி சடலத்தை மீட்டனர். அப்போது அது பெண்ணின் உடல் என தெரியவந்தது. இருப்பினும் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதும் கொலையாளி யார்? என்பது மர்மமாகவே நீடித்தது.

அதனால் தனிப்படை அமைத்துத் துப்பு துலக்க கொலை செய்யப்பட்ட பெண் பொன்னானி பகுதியைச் சேர்ந்த பாத்திமா என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் சம்பவத்தன்று  பாத்திமா தனது கணவர் முகமதுவுடன் கடைசியாக பைக்கில் சென்றதையும், பல மணி நேரத்திற்குப் பின் முகமது மட்டும் வீடு திரும்பியதை எதிர்வீட்டு மூதாட்டி பார்த்துள்ளார்.

இதையும் படிங்க: இன்ஸ்டாவில் பிரபலமான தாய்.. மகனுக்கு போன ஒரே மெசேஜ்… தந்தை செய்த கொடூரம்.. என்ன நடந்தது?

இதனால் போலீசாருக்கு முகமது மீது சந்தேகம் உண்டாக அவரை காவல்நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். ஆரம்பத்தில் முன்னுக்கு பின் முரணாகப் பேசியவர் ஒருகட்டத்தில் “ஆமா சார் நான் தான் என் பொண்டாட்டியை கொன்றேன்” எனக்கூறி அலற விட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட முகமது – பாத்திமா தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

மதுபோதைக்கு அடிமையான முகமது, அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதற்கு நடுவே உறவினர் ஒருவரிடம் நட்பு ரீதியாக பேசிய பாத்திமாவை முகமது சந்தேகப்பட்டுள்ளார். அடிக்கடி அதை சொல்லி மனைவிக்குத் தொல்லை கொடுத்து வந்தார். சம்பவத்தன்று கடற்கரைக்குச் சென்ற இடத்தில் மீண்டும் தம்பதிக்குள் பிரச்சினை வெடித்தது. அதில் ஆத்திரம் அடைந்த முகமது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் கடற்கரை மணலில் குழிதோண்டி மனைவியின் சடலத்தை புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் ஓரிரு நாட்களில் பாத்திமாவின் கால் மட்டும் வெளியே தெரியவர இறுதியில் முகமதுவின் கொடூரச் செயல் போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து முகமதுவை கைது செய்து காவல்நிலையத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

நடத்தையில் சந்தேகம்.. கடற்கரையில் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

Read More

Previous Post

திருமணம் முடிக்காவிட்டால் இனி ’இலவங்கப்பட்டை’ அபிஷேகம் தான்

Next Post

மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறும் 4 ராசிகள் இவைதான்! – Sri Lanka Tamil News

Next Post
மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறும் 4 ராசிகள் இவைதான்! – Sri Lanka Tamil News

மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறும் 4 ராசிகள் இவைதான்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin