இதனைத்தொடர்ந்து இன்று காலை (ஏப்.30) நிலவரப்படி தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. அதன்படி 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,900க்கும், ஒரு சவரன் ரூ.1,11,200க்கும் விற்பனையானது. அதேபோல் 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,575க்கும், ஒரு சவரன் ரூ.92,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனையானது.


