கோலாலம்பூர்:
மலேசியாவின் பொதுப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான பிரசரானா மலேசியா பெர்ஹாட்டின் (Prasarana) தலைவரும், குழுமத் தலைமைச் செயல் அதிகாரியுமான அமிர் ஹம்டான், தமது பதவியிலிருந்து விலகவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளாகப் பிரசரானாவுடன் பயணித்த அமிர், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தனது அடுத்தகட்டத் திட்டங்களுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இவரது பதவிக்காலத்தில் நாட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்தப் பல்வேறு உருமாற்றத் திட்டங்களையும், செயல்பாட்டு சீர்திருத்தங்களையும் அவர் முன்னெடுத்ததாகப் பிரசாரானா விடுத்துள்ள அறிக்கையில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளது.
புதிய தலைமைத்துவ நியமனம் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள நிறுவனம், அமிரின் எதிர்கால முயற்சிகளுக்குத் தனது வாழ்த்துகளையும் பதிவு செய்துள்ளது.



