• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

244 ரன்கள் இலக்கை எளிதாக சேஸிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்… மும்பை அணிக்கு 5 ஆவது தோல்வி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 29, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
244 ரன்கள் இலக்கை எளிதாக சேஸிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்… மும்பை அணிக்கு 5 ஆவது தோல்வி.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 29, 2026 11:51 PM IST

அனுபவ வீரர் ஹென்றி கிளாசென் 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பை இந்தியஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

ஐபிஎல் 2026 தொடரின் 41-வது விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய வில் ஜாக்ஸ் 46 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

மற்றொரு தொடக்க வீரர் ரையன் ரிக்கெல்டன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 123 ரன்கள் (10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) குவித்து மிரட்டினார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 31 ரன்களும், நமன் திர் 22 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. ஹைதராபாத் தரப்பில் பிரஃபுல் ஹிங்கே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

244 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணிக்கு, தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மாவும், ட்ராவிஸ் ஹெட் ஜோடி மின்னல் வேகத் தொடக்கத்தை அளித்தது. ட்ராவிஸ் ஹெட் வெறும் 30 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.

இஷான் கிஷன் ரன் ஏதுமின்றி ஏமாற்றினாலும், அனுபவ வீரர் ஹென்றி கிளாசென் 30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் சலில் அரோரா 10 பந்துகளில் 30 ரன்கள் விளாச, ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

First Published :

Apr 29, 2026 11:51 PM IST

Read More

Previous Post

WB Election 2026 Exit Poll | மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எத்தனைத் தொகுதிகளை வெல்லும்… வெளியான கருத்துக் கணிப்புகள் | இந்தியா போட்டோகேலரி

Next Post

சுக்மா 2026 கலந்துரையாடல்களின் முடிவில் திருப்தி தெரிவித்த சிலாங்கூர் சுல்தான் | Makkal Osai

Next Post
சுக்மா 2026 கலந்துரையாடல்களின் முடிவில் திருப்தி தெரிவித்த சிலாங்கூர் சுல்தான் | Makkal Osai

சுக்மா 2026 கலந்துரையாடல்களின் முடிவில் திருப்தி தெரிவித்த சிலாங்கூர் சுல்தான் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin