கடந்த 1 அல்லது 2 வருடங்களில் நீங்கள் ஹோம் லோன் வாங்கி இருக்கிறீர்கள் என்றால் வட்டி விகிதங்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு நிச்சயமாக உங்களை பாதித்திருக்கலாம். இந்த சூழ்நிலையில் நீங்கள் கடுமையாக உழைத்து சேமித்த பணத்தை எப்படியாவது சேமிக்க முடியுமா என்ற கோணத்தில் நீங்கள் யோசிக்கலாம்.
உங்கள் பணத்தை சேமிப்புகளில் முதலீடு செய்யலாமா அல்லது வேறு ஏதேனும் நிலம் அல்லது தங்கம் போன்றவற்றை வாங்கலாமா என்ற யோசனை உங்களுக்கு வரலாம். ஒரு சிலர் பெரிய அளவிலான EMI பேமெண்ட்கள் காரணமாக அதனை குறைப்பதற்கு ஹோம் லோன் ப்ரீ பேமெண்ட் செலுத்தலாம் என்று கூட நினைக்கலாம். ஒருவேளை இந்த கடைசி ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள் என்றால் அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு ஒரு சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒரு ஹோம் லோன் எடுக்கும்பொழுது கடனின் ஆரம்ப சில வருடங்களில் EMI-ன் பெருந்தொகை வட்டியாக தான் இருக்கும். வருடங்கள் கழியும் பொழுது வட்டியும் குறையும். எனவே எவ்வளவு விரைவாக நீங்கள் உங்கள் கடனை அடைக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு நல்லது. இந்த வழியில் உங்களுடைய மொத்த வட்டி தொகையில் பெரிய தாக்கம் ஏற்படுவதால் நீங்கள் செலுத்தக்கூடிய ப்ரீ பேமெண்ட் தொகை உங்களுடைய முதல் தொகையை குறைக்கிறது.
உங்களுடைய வீட்டுக் கடனை முன்கூட்டியே அடைப்பதற்காக நீங்கள் பெரிய அளவிலான தொகையை ப்ரீ பேமெண்ட் ஆக செலுத்திவிட்டால் அவசர கால சூழ்நிலையின்போது, நீங்கள் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டு பணத்தை கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். மேலும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயம் கூட உண்டாகலாம். பலருக்கு லோனுக்கான வட்டி விகிதங்கள் 9 சதவீதத்தை கடந்துள்ளது. இந்த அதிகரித்த வட்டி விகிதங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உங்களுடைய பட்ஜெட்டை பாதிக்கலாம். இதனை கருத்தில் கொள்ளும்பொழுது நிச்சயமாக ப்ரீ பேமெண்ட் செலுத்துவது ஒரு சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
இதையும் படிக்க:
தங்கம் இப்போ வாங்கலாமா? இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்!
ஆனால் ஒருபோதும் உங்களுடைய எமர்ஜென்சி ஃபண்டுகளை ப்ரீ பேமெண்ட்களுக்கு பயன்படுத்த வேண்டாம். அவசர கால சூழ்நிலை என்பது எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் அந்த பணத்தை நீங்கள் ஒருபோதும் தொடக்கூடாது. உங்களுடைய சேமிப்பு கணக்கு அல்லது கூடுதல் ஃபிக்சட் டெபாசிட் போன்ற உங்களிடம் இருக்கக்கூடிய பணத்தை நீங்கள் ப்ரீ பேமெண்டாக செலுத்தலாம்.
இதனால் உங்களுடைய முதல் தொகை உடனடியாக குறைந்து உங்கள் வட்டி விகிதத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் உங்களுடைய தற்போதைய வருமானத்திலிருந்து சிறிதளவு பணத்தை எடுப்பதன் மூலமாக உங்களுடைய EMI தொகையை அதிகரிப்பதும் நல்ல யோசனையாக இருக்கும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)