Last Updated:
இந்த திமிங்கலத்திற்கு டிம்மி என அந்நாட்டு மக்கள் செல்லப் பெயர் வைத்துள்ளனர்.
ஜெர்மனி நாட்டில் பால்டிக் கடலின் ஆழமற்ற பகுதியில் தவித்து வரும் திமிங்கலத்தை நகர்த்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஃபேடோர்ப் பகுதியில் 10 மீட்டர் நீளமும் 12 டன் எடையும் கொண்ட அரிய வகை ராட்சத கூன்முதுகு திமிங்கலம் ஒன்று ஆழமற்ற கடல் பகுதிக்கு வந்தது. அந்த திமிங்கலம் அட்லாண்டிக் கடல் பகுதியில் இருந்து மீன் கூட்டத்தை துரத்திக் கொண்டு அங்கு வந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த திமிங்கலத்திற்கு டிம்மி என அந்நாட்டு மக்கள் செல்லப் பெயர் வைத்துள்ளனர்.
➡️ Timmy, la ballena jorobada de Alemania, ha vuelto a quedar encallada en la bahía de Wismar
Su presencia en estas aguas sigue siendo un misterio para los expertos porque el mar Báltico no es un hábitat adecuado para su especie pic.twitter.com/a9luW4KXms— ABC.es (@abc_es) April 23, 2026
உப்புத் தன்மை குறைந்த, ஆழமற்ற பகுதியில் அந்தத் திமிங்கலம் சிக்கி இருக்கும் நிலையில் அதனை ஆழமான வடக்கு கடல் பகுதிக்கு நகர்த்த அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளது. படகு ஒன்றுடன் அந்த திமிங்கலத்தை கட்டி இழுப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் பிறகு அந்த திமிங்கலம் மீண்டும் அட்லாண்டிக் கடல் பகுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Apr 29, 2026 11:26 AM IST


