இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகா தேரர்களின் கையொப்பங்கள் எனக் கூறி ஆவணங்களைப் போலியாகத் தயாரித்த சம்வம் தொடர்பில் சுகீஸ்வர பண்டார மீது குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
சுகீஸ்வர பண்டார, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் ஆகியோருக்குக் கடிதம் எழுதி, அதன் மூலம் ஒரு போலி நியமனத்தைப் பெற்றிருந்தது தெரியவந்துள்ளதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை தென்னிலங்கை ஊடகங்கள் பின்வருமாறு விளக்கியுள்ளன.
குற்றப் புலனாய்வுத் துறை
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அம்மடுவ குடா சிறிய கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே பதவியைப் பெறுவதற்காக அந்தப் போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, 2010 ஏப்ரல் 9 அன்று குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒரு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் முறைப்பாட்டை ஆய்வு செய்ததில், சபரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநரான சுகீஸ்வர பண்டாரவின் மூத்த சகோதரரான ஜனக பிரியந்த பண்டாரவின் அதிகாரங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
முன்னதாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பிறகு, ஜெயசிங்க முதியன்செலகே சுகீஸ்வர லெனின் பண்டார என்ற முழுப்பெயர் கொண்ட இவர், அவரது தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

